Tamil Cinema News | சினிமா செய்திகள்
நம்ம தல அஜித் சார்.! விஸ்வாசம் படப்பிடிப்பில் இருந்து வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை
Published on

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை வருகிற பொங்கலுக்கு மிக பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் படக்குழு, படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது அஜித் அடிக்கடி ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆனது இது அனைவரும் அறிந்ததே, இந்த நேரத்தில் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிக்கும் சுரேகாவாணி விஸ்வாசம் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நான் விஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கிறேன் இங்குதான் நம்ம தல அஜித் சார் இருக்கிறார் நான் அவரை சந்திக்கப் போகிறேன் எனக் கூறியுள்ளார், இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.
