Tamil Cinema News | சினிமா செய்திகள்
மொத்த தியேட்டர்களையும் அள்ளிய விஸ்வாசம்.. தனி சாம்ராஜ்யம் அமைக்கும் அஜித்!
By
தியேட்டர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய விஸ்வாசம் உரிமையாளர்..
எப்பொழுதுமே சினிமா வெளியிடுவதில் மிக அதிகமாக போட்டியிட்டது முன்னணி நடிகர்களான அஜித்தும், விஜயும் தான் ஆனால் தற்போது வரும் பொங்கலுக்கு சூப்பர் ஸ்டாரும், தல அஜித்தும் மோதப்போகின்றன. இது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வித்யாசமான கதைக் களத்தை உருவாக்கி இருப்பார் என்று நம்பப்படுகிறது.

viswasam-ajith
என்னதான் ஒரு சில நாட்கள் வித்தியாசத்தில் படங்கள் வெளியிட்டாலும் இந்த இரண்டு படங்களுக்கும் மோதல் கடுமையாக இருக்கும் என்று தியேட்டர் அதிபர்கள் குறிப்பிடுகின்றனர். அதிலும் முக்கியமாக விஸ்வாசம் படத்தின் தமிழக உரிமையை பெற்ற கே.ஜே.ஆர்.ராஜேஷ், கிட்டத்தட்ட 70% தியேட்டர்களை புக்கிங் செய்து விட்டாராம். அனைத்து தியேட்டர்களும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் என்று அறிவித்துள்ளனர்.
இதனால் பேட்ட உரிமை பெற்ற சன் பிக்சர்ஸ் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கின்றன. ஏனென்றால் இன்னும் 30% தியேட்டர்கள்தான் உள்ளதாகவும் அதுவும் பிரபலமானவர்கள் தியேட்டர்கள் இல்லையாம். இந்த வியாபார யுக்தியை எப்படி சன் பிக்சர்ஸ் கையாள போகுது என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஏனென்றால் விளம்பரத்திலும் வியாபாரத்திலும் கொடிகட்டி பறக்கும் சன் பிக்சர்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே.

petta
