Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு ரெடியா.! இதோ வந்துவிட்டது அடுத்த அறிவிப்பு.!
தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு தான் முதலில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தார்கள் ஆனால் சினிமாவில் நடந்த ஸ்ட்ரைக் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போனதால் தற்போது வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

ajith-viswasam
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக பரபரப்பாக நடைபெற்று வருகிறது, சமீபத்தில் வெளியாகிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
மேலும் அஜித், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலானது இந்த நிலையில் படத்திலிருந்து ஒரு முக்கிய செய்தி தற்போது அஜித் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு வந்துள்ளது, ஆம் விசுவாசம் படத்தின் டப்பிங் பணிகளை அஜித் தொடங்கி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது,இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே சந்தோஷத்தை உருவாக்கியுள்ளது
