Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் படத்தின் மாஸ் வில்லன் இவர்தான்! அவரே வெளியிட்ட புகைப்படம்
Published on
விசுவாசம் படத்தின் எதிர்பார்ப்பு, வியாபாரம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. அறம் தயாரிப்பாளர் ராஜேஷ். விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை சுமார் 47 கோடிக்கு வாங்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல. க்யூப் விளம்பரம் உள்ளிட்ட இதர செலவான 3 கோடியையும் சேர்த்தால் படத்தின் விலை 50 கோடி.
விஸ்வாசம் படத்தில் யார் வில்லன் என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது. முன்னணி நடிகர் ஒருவர் இதில் வில்லனாக நடிக்கின்றார் என செய்திகள் தொடர்ந்து வந்துக்கொண்டே தான் இருக்கின்றது.
இதில் ஒரு வில்லனாக தெலுங்கு நடிகர் Ravi Awana என்பவர் நடிக்கவுள்ளாராம், அவரே அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை தன் சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அஜித் கூட நடிக்கும் நடிகர்களும் அவரின் ரசிகராக மாறிக்கொண்டு வருகிறார்கள்.

viswasam-villain-ajith
