Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.!
தல அஜித் சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் விஸ்வாசம், இந்த திரைப்படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, வசூலில் சாதனை படைத்து வருகிறது.

viswasam-release
படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், மேலும் விஸ்வாசம் படத்தில் அஜித் விஜய் பற்றி மறைமுகமாக பேசியுள்ளார் இதை பற்றி ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆம் விஸ்வாசம் படத்தில் ஒரு சண்டைகாட்சியில் அஜித் தன் மகளிடம் எத்தனை போட்டிகளில் ஜெயிச்சுருக்க என கேட்பார் அதற்க்கு அந்த சிறுமி 62 என பதிலளித்துள்ளார் அதற்க்கு அஜித் உடனே அடேங்கப்பா என கூறுவார், இந்த காட்ச்சியை தான் அஜித் விஜய்யை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.
ஏன் என்றால் விஜய் இதுவரை 62 படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது 63 வது படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார் இதை தான் விஜய்யை பாராட்டும் வசனமாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
