fbpx
Connect with us

Cinemapettai

விஸ்வாசம் கதை, கதாபாத்திரம் பற்றி முதல் முறையாக வெளியே கூறிய சிவா.!

News | செய்திகள்

விஸ்வாசம் கதை, கதாபாத்திரம் பற்றி முதல் முறையாக வெளியே கூறிய சிவா.!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அதுவும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எப்பொழுதும் எதிர்பார்ப்பு இருக்கும், இந்தநிலையில் அஜித் நடித்துவரும் விஸ்வாசம் படத்துக்கு ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் விஸ்வாசம் படத்தின் இயக்குனர் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியை கொடுத்துள்ளார் ஆம் இயக்குனர் சிவா முதல்முறையாக ஒரு பேட்டியில் விஸ்வாசம் படத்தின் கதை பற்றியும் பிரபலங்கள் பற்றியும் பேசியுள்ளார், அதில் அவர் கூறியதாவது.

மிகவும் சந்தோஷமான எமோஷனலான திருவிழாபோல் படமாக இருக்கவேண்டும் என்றுதான் அஜித் சாரும் நானும் தயாரிப்பாளரும் ஆசைப்பட்டோம் அதன்படி தான் முடிவு செய்தோம், விஸ்வாசம் படத்தின் கதை தேனி மாவட்டத்தில் நடக்கும் கதைதான் இது, இதில் வெளியே வீரமாகவும் உள்ளுக்குள் வேள்ளந்தியாகவும் வாழும் மக்களின் உணர்வுபூர்வமான சம்பவங்கள் தான் இந்த விஸ்வாசம் படத்தின் கதை.

கிராமத்தில் ஒரு ஆள் எப்படி இருப்பாரோ அதே போல அஜித் நடித்து அசத்தியுள்ளார், அதுமட்டுமில்லாமல் மதுரை பாஷையில் அஜித் மிரட்டலாக பேசியுள்ளார், மேலும்  அஜித்திற்கு இரண்டு வேடம் படத்தில் கிடையாது முதல் பாதியில் கிராமத்திலும் இரண்டாம் பாதி நகரத்திலும் கலக்குவார்கள் அதேபோல் நயன்தாராவுக்கு படத்தில் மிக முக்கியமான வேடம் படத்தில் நயன்தாராவின் பெயர் நிரஞ்சனா அவர் இந்த பெயரில் தான்  நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் விஸ்வாசம் படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளது ஒவ்வொன்றும் வெவ்வேறு ஸ்டைலில் இருக்கும் அதில் முக்கியமான இரண்டு பவர்ஃபுல்லான பாடல்கள் இருக்கிறது இவ்வாறு கூறியுள்ளார் சிவா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top