Connect with us

Cinemapettai

விஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை

viswasam-release

Reviews | விமர்சனங்கள்

விஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை

விஸ்வாசம் படம்.. விமர்சனம்

தல அஜித்தை தியேட்டர் ஸ்கிரீனில் பார்க்கும் பொழுது ஒரு ஒரு முறையும் திருவிழா கோலம்தான். இந்த முறை விஸ்வாசம் கொண்டாட்டம் நடைபெற்றது. டைரக்டர் சிவா உடன் நான்காவது படமாக விஸ்வாசம் வெளிவந்தது. விஸ்வாசம் படத்தில் நயன்தாரா ஜெகபதிபாபு தம்பிராமையா யோகிபாபு மற்றும் பலர் நடித்தனர்.

விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் வெளிவரும் பொழுது படத்தினைப் பற்றிய சில விஷயங்கள் வெளியே வந்தது. இந்த தூக்குதுரை கேரக்டர் அப்பொழுதுதான் அனைவருக்கும் தெரியவந்தது அதனைப் பற்றி கூகுளில் தேடுதல் வேட்டை நடந்தது.

அஜித்தின் அறிமுக காட்சி அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரையும் புல்லரிக்க வைத்தது. முதல் பாதி அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்ப்பாட்டமில்லாமல் சென்றது. படம் முழுவதும் குடும்ப சென்டிமெண்ட் காட்சிகள் நிறைந்து இருந்தது.

தூக்குதுரை கதாபாத்திரத்தில் அஜித் மிரட்டியிருப்பார். கொடுவிலார்பட்டி, மும்பை என இரண்டு பகுதிகளில் படத்தின் கதை நகர்கிறது. அஜித்தும் இரண்டு கதாபாத்திரத்திலும் வித்தியாசமாக நடித்திருப்பார்.

நயன்தாரா கேரக்டர் முக்கியமானது அவர் நடிப்பதற்கு நிறைய வாய்புகள் இருந்தன. ஆனால் படத்தின் இறுதிக்காட்சியில் எதிர்பார்த்த சண்டை இல்லாததால் சற்று ஏமாற்றம் இருந்தது. நிறைய காட்சிகளை யூகிக்க முடிந்தது.

இமானின் இசை அஜித் ரசிகராகவே இசையமைத்துள்ளார். விஸ்வாசம் படம் பொழுதுபோக்காக குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படமாக இருக்க வேண்டும் என்பதில் டைரக்டர் சிவா உறுதியாக இருக்கிறார். அஜித்-சிவா காம்பினேஷனில் கண்டிப்பாக இது நல்ல படம். கண்டிப்பாக பார்க்கலாம்.

Rating: 3 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top