fbpx
Connect with us

Cinemapettai

விஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..

viswasam-wordwide-trending1

Celebrities | பிரபலங்கள்

விஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..

அஜித்திற்கு விஸ்வாசமான மனைவி

அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளிவர உள்ள திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை ஷாலினி தன் குடும்பத்துடன் முதல்நாள் பார்ப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர் தற்போது அது நிறைவேறி உள்ளது. ஆனால் அஜித் அதில் பங்கு கொள்ளவில்லை.

அஜித் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு ஷாலினி அஜீத் எப்பொழுதும் ரசிகர்களுடன் சேர்ந்து முதல்நாள் முதல் காட்சி பார்ப்பார். அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகும். அதேபோல் என்னை அறிந்தால், வேதாளம் மற்றும் விவேகம் போன்ற படங்களுக்கும் முதல் நாள் வந்து பார்த்தார்.

ஆனால் இப்பொழுது கூட்டம் அதிமாக வருவதால் ஏன் தேவை இல்லாத பிரச்சனை என ஒதுங்கி கொண்டார் ஷாலினி. நேற்று திரையரங்கிற்கு வந்த ஷாலினி பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து தற்போது சமூக வலைதளங்கள் பதிவிட்டுள்ளனர். அதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரபல திரையரங்கில் படக்குழுவினருடன் ஷாலினி படம் பார்த்துள்ளார். அதில் இயக்குனர் சிவா மற்றும் d இமான் பங்கேற்றுள்ளனர். அந்த புகைப்படத்தில் ஷாலினி மட்டும் படம் பார்க்க வந்துள்ளதாக தெரிகிறது. பொங்கல் தினத்தன்று பார்ப்பதற்கு முன்பாகவே படக்குழுவினர் நேற்று படத்தை பார்த்துள்ளனர்.

படம் பார்த்த ஷாலினி ரொம்ப நாள் கழித்து குடும்பத்தோட பார்க்கும் படம்போல் உள்ளதாக கூறி இருக்கிறார். அஜித் கேரக்டர் மாஸாக இருக்கிறதாம். ஷாலினி மட்டும் அல்ல ஷோ பார்த்த அனைவரும் செமயா இருக்குனு சொல்லிருக்காங்க. இண்டர்வல் சீனில் அஜித் பேசும் வசனம் மரண மாஸ் என கூறுகின்றனர்.

அஜித் சிவா படங்களில் இன்னொரு ஒற்றுமை என்னவென்றால் கீழே பாரங்க ஆச்சர்யபடுவிங்க.

வீரம்- 156 நிமிடங்கள் (2 மணி நேரம் 36 நிமிடங்கள்)
வேதாளம்- 154 நிமிடங்கள் (2 மணி நேரம் 34 நிமிடங்கள்)
விவேகம்- 157 நிமிடங்கள் (2 மணி நேரம் 37 நிமிடங்கள்)
விஸ்வாசம்- 152 நிமிடங்கள் (2 மணி நேரம் 32 நிமிடங்கள்)

டைரக்டர் சிவா போர் அடிக்காமல் சரியாக படத்தை எடுத்துவருகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top