நடிகர் அஜித் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடித்து வருகிறார் இந்த படத்திற்கு விசுவாசம் என டைட்டில் முன்னாடியே அறிவித்துவிட்டார்கள் இதற்க்கு முன் சிவா வீரம், வேதாளம்,விவேகம் என மூன்று படங்களை இயக்கியுள்ளார், மேலும் விஸ்வாசத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தார நடித்து வருகிறார்.

மேலும் படத்தில் தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர், விவேக் என பல காமெடி நடிகர்கள் நடித்து வருகிறார்கள் மேலும் தம்பி ராமையாதான் அஜித்தின் மாமாவாக நடித்துள்ளார். இந்த நிலையில் என்னை அறிந்தால் படத்தில் நடித்த குட்டி குழந்தை பேபி அணிகாவும் இணைந்துள்ளார், என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார் விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு மகளாக நடித்துள்ளார் என கூறுகிறார்கள்.

நயன்தாராவின் மகள் என்றால் அஜித்தின் மகளாக தான் இருக்கணும் அங்குதான் படத்தில் நயன்தார என்ன கேரக்டர் என்பது ட்விஸ்ட்டாக இருக்கிறது இந்த நிலையில் நயன்தார விசுவாசம் படபிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. மேலும் படத்தில் நயன்தார மருத்துவராக நடிக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.

nayan
nayan