viswasam-third-poster
viswasam-third-poster

கடந்த சில நாட்களாக சர்கார் படத்தின் பல சுவாரசியமான சம்பவங்களை பார்த்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இதனையடுத்து தல அஜித் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் விஸ்வாசம்.

இயக்குனர் சிவாவுக்கு அஜித் நடிக்கும் நாலாவது படம் இதுதான். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கும் மேலாக விஸ்வாசம் பட அப்டேட்டுக்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பு என்னவென்றால் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. அனைத்து டப்பிங் காட்சிகளும் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஒரு சில சண்டை காட்சிகள் இருப்பதாகவும் அதனை இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையுடன் அனைத்தும் முடிவடைந்துவிடும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அஜித் ரசிகர்களின் பொங்கல் கொண்டாட்டம் இனிதே தொடங்கட்டும்.