Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் படம் பார்த்து சென்சார் போர்டு விமர்சனம்.. செம மாஸ்
விஸ்வாசம் சென்சார் போர்டு
விஸ்வாசம் படத்தை பற்றி வரும் ஒரு ஒரு செய்திகளும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வகையில் இந்தப் படமும் வெற்றி பெறும் என ஆவலுடன் இருகின்றனர் ரசிகர்கள்.
படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு தற்போது சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
வீரம், வேதாளம் ஆகிய இரண்டு படங்களும் யு சான்றிதழை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வகையில் இந்த திரைப்படமும் யு சான்றிதழ் பெற்றதால் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தை பார்த்த போர்டு உறுப்பினர்கள் விஸ்வாசம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் எனவும், படத்தின் பாடல்கள் அத்தனையும் அழகா உள்ளதாகவும் கூறினார். இதனால் அவரது ரசிகர்கள் படத்தை திரையில் காண ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.
