Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் படத்தில் அஜித்தின் பெயர் என்ன தெரியுமா.! லீக் ஆகிய தகவல்
அஜித் தற்பொழுது விசுவாசம் படத்தில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் இதற்கு முன் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

viswasam-villain-ajith
விசுவாசம் படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது இதனால் படப்பிடிப்பு மிக விரைவாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் படத்தின் மீதான எதிர் பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இணையதளங்களில் விசுவாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது, மேலும் விசுவாசம் படத்தில் அஜீத்தின் பெயர் தற்பொழுது லீக் ஆகியுள்ளது விசுவாசம் படத்தில் அஜித் “தூக்கு துரை” என்ற பெயரில் நடித்துள்ளார் எனதற தகவல் லீக் ஆகியுள்ளது.
இந்தப் படத்தில் அஜித்தின் பெயர் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள் மேலும் படத்தில் அஜித் டபுள் ரோல் என்பதால் இன்னொரு அஜித்தின் பெயர் என்ன என்பது தெரியவில்லை.
