fbpx
Connect with us

விஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.

News | செய்திகள்

விஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.

விஸ்வாசம்

இளமை தோற்றம், ஓல்ட் கெட் அப் என தூக்குதுறையின் இருவேறு பரிணாமங்களில் தல அஜித். சித் ஸ்ரீராம் குரலில் “கண்ணான கண்ணே” பாடல் படத்தின் ரிலீசுக்கு முன்பே வைரல் ஹிட். படத்திலும் இப்பாடல் இடம்பெறும் இடங்கள் பல ரசிகர்களை மெய் சிலிர்க்க செய்தது.

அஜித் மற்றும் அவரது மகளின் எமோஷனல் பகுதிகள் நண்டு சிண்டு முதல் பெரியவர்களை வரை பலரை பெரிதாக கவர்ந்தது. குடும்ப உறவுகளை மையப்படுத்தி குறிப்பாக பெற்றோர் குழந்தைகளின் உறவை வலுப்படுத்த செதுக்கப்பட்ட படம் என்றால் அது மிகையாகாது.

தனது ஆசை, தன்னால் இயலாததை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது, அவர்களின் போக்கில் சுதந்திரமாக விட வேண்டும் என்ற மெஸேஜ் உள்ளதாலோ என்னவோ ரசிகர்கள் மட்டுமன்றி பல சினிமா நட்சத்திரங்களும் படக்குழுவை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் மோகன் ராஜா “எமோஷனில் மூழ்கிவிட்டேன் விஸ்வாசம் பார்த்து. என் நெருங்கிய நண்பர் சிவாவுக்காக மகிழிச்சி அடைகிறேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.” என் அவர் பதிவிட்டுள்ளார்.

21000 லைக்ஸ், 5000 ரி- ட்வீட் என தல ரசிகர்கள் இந்த ஒற்றை டீவீட்டை ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top