Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் பாடல்.. பாடலாசிரியர் விவேகா எழுதிய பாடலை பற்றி ட்விட்
அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் படம் விஸ்வாசம். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது இப்படி இருக்கும் நிலையில் இப்படத்தின் பாடலாசிரியரான விவேகா தனது ட்விட்டர் பக்கத்தில் அப்பாடலை பற்றி ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

viswasam-leaked-song
விஸ்வாசம் படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், d இமான் இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் வந்த விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இயக்குனர் சிவாவும், அஜீத்குமாரும் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்கள் வெளிவந்தன. இவர்களது கூட்டணியில் வந்த படங்கள் அனைத்தும் வெற்றி கண்டன. அதனால் விஸ்வாசம் படத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
Yesterday we met for one more song in #Viswasam its a wonderful melody track from @immancomposer thanks to @directorsiva #Ajith #Thala #ViswasamUpdates pic.twitter.com/LwUPHsBW6k
— Viveka Lyricist (@Viveka_Lyrics) November 16, 2018
இப்படத்தின் பாடலாசிரியர் விவேகா நேற்று படத்தின் பாடல்கள் குறித்த தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் இமான் மற்றும் விவேகா வரும் உள்ள புகைப்படத்தை வெளியிட்டார். டி இமான் இசையில் ஒரு மெலடி பாடல் உருவாகியுள்ளதாகவும், அதைக் கேட்டது அந்த பாடல் மனதை உருக்கும் பாடலாகவும் இருக்கிறது என டுவிட் செய்துள்ளார் இதனால் உற்சாகத்தில் உள்ளனர்.
