Tamil Cinema News | சினிமா செய்திகள்
கில்லி மாதிரி சொல்லி அடித்த அஜித்.. 2019ம் ஆண்டு ஊர் முழுக்க இதான் பேச்சி
தல அஜித் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்ததோடு மட்டுமல்லாமல் பல கௌரவங்களையும் பெற்று வருகிறது.
அந்தவகையில் 2019ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகளில் விஸ்வாசம் முதலிடம் பெற்று அசத்தியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக தல அஜித் இணைந்த படம்.
அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு தல அஜித் ரசிகர்களே சிவாவுடன் படம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அதை எல்லாம் முறியடிக்கும் வகையில் விஸ்வாசம் திரைப்படம் இதுவரை தல அஜித்தின் படங்கள் சாதிக்காத வசூலை பெற்றது.
சமூக வலைதளங்களில் விஸ்வாசம் திரைப்படத்தின் பற்றிய செய்திகள் சக்கை போடு போட்டன. இது பாதி வருடத்திற்கான கணக்குதான் என்றும், இன்னும் இந்த ஆண்டின் முழுமையான ட்விட்டர் பதிவுகள் வெளியிடப்படவில்லை என்று ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
