தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ என்றால் அது அஜித், விஜய் தான் இவர்களின் படம் வருகிறது என்றால் ரசிகர்கள் பால் அபிஷேகம், மாலை , போஸ்டர் அடிப்பது என அமர்களப் படுத்திவிடுவார்கள் இந்த இரு நடிகர்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

அதேபோல் இவர்களின் படங்களுக்கு எப்பொழுதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு இருக்கும் அதேபோல் இவர்களின் படம் வந்தாலே ரசிகர்களிடம் யுத்தமே நடக்கும் சமூகவளைதலத்தில் பெரிய போர் நடக்கும், இதை தாண்டி ரசிகர்கள் வாய் சண்டையும் போட்டுகொள்வார்கள்.

இந்த நிலையில் அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கும் விஜய்யின் சர்கார் படத்திற்கும் நிறைய போட்டிகள் நடந்து வருகிறது, பிரபல பாலிவுட் இணையதளம் அஜித் விஸ்வாசம் மற்றும் விஜய்யின் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் இதில் எது மிகவும் கவர்ந்தது என ஒரு கருத்து கணிப்பு நடத்தினார்கள்.

அதில் விஸ்வாசம் 53% வாக்குகளும் சர்கார் 47% வாக்குகளும் இடம் பெற்றிருந்தது இதில் விஸ்வாசம் விஜய்யின் சர்கார் படத்தை விட 6 புள்ளிகள் வித்தியாசத்தில் சர்கார் படத்தை தோற்கடித்தார்கள் அஜித் ரசிகர்கள்.