fbpx
Connect with us

Cinemapettai

விஸ்வாசம் படத்தில் இடம்பெறாத அஜித் என்ட்ரி சாங்..! கவிஞர் அஸ்மின் பாடல் – வீடியோ

Videos | வீடியோக்கள்

விஸ்வாசம் படத்தில் இடம்பெறாத அஜித் என்ட்ரி சாங்..! கவிஞர் அஸ்மின் பாடல் – வீடியோ

தூக்குத்தொற வர்ராரு…

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் விஸ்வாசம் இத்திரைப்படத்துக்கு D.இமான் இசையமைத்துள்ளார் இதன் பாடல்கள் நேற்று வெளியாகின.இதன் பாடல்கள் வெளிவருவதற்கு முன்பாக பாடலாசிரியர் அஸ்மின் தல அஜீத்துக்கு நான் பாடல் எழுதியிருந்தால் இப்படி எழுதியிருப்பேன் என்று பாடலொன்றை எழுதி வெளியிட்டிருந்தார்.அஸ்மின் ‘நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற தப்பெல்லாம் தப்பேயில்லை என்ற பாடலை எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் ஜெயா.மறைந்த போது எழுதிய வானே இடிந்ததம்மா என்று இரங்கல் பாடல் உலகமெங்கும் வைரலானது.

‘தல’ அஜீத்துக்காக அஸ்மினால் எழுதப்பட பாடல் வரிகளானது அஜீத் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததினால் இந்தப்பாடல் இன்று இசையோடு வெளியாகியுள்ளது. பாடலுக்கு இசையமைத்து பாடியுள்ளார் இளம் இசையமைப்பாளர் தஜ்மீல் ஷெரீப். இவர் ஆஸ்கார் நாயகனின் இசைக் கல்லூரியில் மாணவர்களுக்கு பியானோ கற்பித்து வருகின்றார். தல அஜீத்துக்கு ஏற்ற மாஸான வரிகளோடு வெளியாகியுள்ள இப்பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

தூக்குத்தொற வர்ராரு…

பாடல் வரிகள் : கவிஞர் அஸ்மின்
இசையமைத்து பாடியவர்: தஜ்மீல் செரீப்

தொகையறா

தூக்குத்தொற பேரக்கேட்ட
வாயப்பொத்தும் நெருப்பு
தூக்கிவச்சி கொஞ்ச சொல்லும்
பச்சபுள்ள சிரிப்பு

அவர் வேட்டிகட்டி வந்து நின்னா
வேட்டிக்குத்தான் மதிப்பு -நான்
பாட்டில் வச்சி பாட வந்தேன்
எங்க பாண்டியரின் சிறப்பு…

viswasam-fanmade

viswasam-fanmade

சரணம்-1
பட்டாக் கத்தி பளபளக்க
பட்டி தொட்டி பரபரக்க
எட்டுவச்சு வச்சு வர்ராரு பாரு
எதிரி ஆகப்போறான் சுக்கு நூறு…

கெட்டதெல்லாம் கருவறுக்க
தொட்டதெல்லாம் தூள்பறக்க..
முட்டி முட்டி மொளச்சாரு
தல வாழ்ந்து வரும் வரலாறு ..

சோழமன்னன் வந்து மதுரயில பொறந்தான்
சோகம் ஓடிருச்சு எமக்கிவன் வரந்தான்
ஏழமக்களுக்கு அள்ளி அள்ளி அளந்தான்
எம்ஜிஆரு போல எங்க நெஞ்சில் கலந்தான்

தன்னாலே வந்து இவன் தலையெடுத்தான்-ஒரு
கண்ணாலே எதிரிகளின் கதமுடிப்பான்-வானம்
அண்ணாந்து பார்க்கும் இவன் பூமொகத்த-பூமி
கொண்டாடித்தீர்க்கும் இவன் தைரியத்த…

பலபேரு இருந்தாலும் தல கொஞ்சம் வித்தியாசம்
அதனால எல்லோரும் இவன் மேலே விஸ்வாசம்..

ஒருநாளில் தமிழ்நாடு இவனால் உருமாறும்
தல பேரச் சொல்லிமுழு தமிழ் கொண்டாடும்.

தல மகன் பிறந்தான் தமிழ் வழி நடந்தான்-எங்கள்
உயிரிலும் மனதிலும் அவன் அமர்ந்தான்..

சொல்லிசை

இருக்குதிருட்டு
வெறுக்கும் திருட்டு
அறுக்கும் புரட்டு
அடித்து விரட்டு
எடக்கும் முடக்கு
நடக்கும் பொழுது
இருக்கும் உனது
விழியில் நெருப்பு
பொறுத்து பொறுத்து இருப்பதெதற்கு
எடுத்து பிடித்து
தடுத்து நிறுத்து
தலையின் மனது
கடலில் பெரிது
தலைபோலிங்கு
இருப்ப தரிது
எம் உலகும் உனது உணர்வும் உனது
உறவும் உனது
உயிரும் உனது

சரணம்-02

தொட்டுத்தொட்டு நீயுரச
கொட்டிக்குவ வாய்க்கரிச
பட்டம் கேட்டு நின்னாரா பாரு?
தல அதனால்தான் சூப்பஸ்டாரு…

பட்டுப்புட்டா சொல்லுவாரு
கெட்டுப்பட்டா தள்ளுவாரு
வெட்டவெட்ட எழுந்தாரு…
தல கட்டி வச்ச காட்டாறு…

புகழ விரும்பாதது அவரது குணம்தான்
உலகே கொண்டாடுது தலையென தினந்தான்
உதவி செய்தாலுமே மறைத்திடும் மனந்தான்
உயர்வாய் போற்றுகிறார் பகைவருந்தான்

அன்பால வந்துஇவன் அரவணைச்சான்-நம்ம
அண்ணாவைப் போல நெஞ்ச அபகரிச்சான்
எல்லோரும் இவன் பின்னே படையெடுப்போம்
எங்கள் அண்ணாவுக்காய் என்றும் உயிர்கொடுப்போம்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top