Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

விஸ்வாசம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் – ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆக காரணம் என்ன தெரியுமா ?

அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட இரண்டும் பொங்கலுக்கு ரிலீஸாகி வைரல் ஹிட் அடித்தது. சினிமா ரசிகர்கள் இரண்டு படங்களையும் கொண்டாடினர் என்றால் அது மிகையாகாது. அந்த சமயத்தில் விஸ்வாசம் மற்றும் ஓட்ட கலெக்ஷன் என அந்த சமயத்தில் சமூகவலைத்தளங்களில் பல தகவல்கள் பரவியது. எனினும் பொதுஜனமான நாம் சென்று அவர்கள் பட்ஜெட் மற்றும் லாபகணக்கை பார்க்கவா முடியும். நாம் ஒன்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் கிடையாதே. சரி வாங்க இப்போதைய விஷயத்துக்கு வருவோம்.

#ViswasamFakeBOExposed இந்த ஹாஸ் டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது. அதற்கு முக்கிய காரணம் பிரபல விநியோகஸ்தர் ஒருவர் பொய் வசூல் விவரம் சொல்கிறார்கள் ஒரு சிலர் என ஒரு பேட்டியில் சொன்னார். அந்த வீடியோ வைரலானது.

பலரும் இது பேட்ட மற்றும் விஸ்வாசம் இரண்டையும் ஒப்பிட்டு தான் கூறுகிறார் என்றனர். பின்னர் இந்த ஹாஸ் டேக் ட்ரெண்டிங் ஆனது. இதனால் அஜித் ரசிகர்கள் ஒருபுறம் கடுப்பாகினர்.

#ViswasamTruthPrevails விஸ்வாசம் ஹிட் தான் அனைவருக்கும் லாபம் தான் என்றெல்லாம் சொல்லி வந்தனர். இந்நிலையில் படத்தை விநியோகம் செய்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தங்கள் த்விட்டேர் பக்கத்தில் ஸ்டேட்டஸ் தட்டினர்.

அது வைரலானது, அஜித் ரசிகர்கள் அதனை கொண்டாட ஆரம்பித்தனர். எனினும் இந்த டீவீட்டில் மறைமுகமாகவும் இரு விஷயத்தை வைத்துள்ளனர். ஒன்று எதனை தீபாவளி வந்தாலும் என்பது சென்ற முறை ரிலீசான விஜயின் சர்கார் மற்றும் இனி ரிலீசாகும் பிகில் படத்தை குறிப்பிட்டனர். மேலும் ரஜினிகாந்தின் 2.0 வசனத்தையும் Happy Diwali folks என்றும் சேர்த்துள்ளனர்.

தற்பொழுது விஸ்வாசம் பாக்ஸ் ஆஃபீஸ் ட்ரெண்ட்டிங் ஆகும் நிலையில், விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றும் விதமாக #FakeBOFraudVIJAY என்ற ஹாஸ்டேக்கையும் தற்பொழுது உருவாக்கி உள்ளனர் ஒரு சிலர்.

twitter trend

இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் ரி ட்வீட் செய்ய ட்விட்டர் தெரித்துக்கொண்டிருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top