Videos | வீடியோக்கள்
சர்கார், மாரி 2-வை இரண்டே நாளில் சாய்த்த விஸ்வாசம்..! தூக்குதுரைனா சும்மாவா
சர்கார், மாரி 2 பாடல்களை தட்டி தூக்கிய விஸ்வாசம்
அஜித் நடித்து வெற்றி நடை போட்டு வரும் விஸ்வாசம் படம் வீடியோ பாடலான அடிச்சு தூக்கு வெளிவந்து பெரும் சாதனை படைத்துள்ளது. இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளிவந்தபோதே ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதேபோல் தற்போது வெளிவந்து சில நேரங்களில் இந்த பாடல் இரண்டு மில்லியன் பார்வையாளர்களை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. இது சர்கார் படத்தின் சிம்டாகாரன் மற்றும் மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல்களின் சாதனையை தற்போது முறியடித்துள்ளது. இந்த சாதனை முதல் இரண்டு நாளில் எடுத்த சாதனை ஆகும்.
இதில் சிம்டான்காரன் இதுவரையில் 361k லைக்ஸ் பெற்றுள்ளது ஆனால் விஸ்வாசம் இரண்டு நாளில் 320k லைக்ஸ் பெற்று முறியடிக்க உள்ளது.
இது தற்போது அஜித் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி மீண்டும் அவர் வெளியிட்ட அறிக்கையின் படி நடந்து கொள்வார்கள் என்று சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
