Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் வசூலை முறியடிக்க முடியாமல் திணறும் பிகில்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு தேவை
தல அஜித் நடிப்பில் இந்த வருடத் துவக்கத்தில் பொங்கல் வெளியீடாக வெளிவந்த திரைப்படம் விஸ்வாசம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது. உலக அளவில் ரஜினியின் பேட்ட படம் அதிக வசூல் செய்தாலும் தமிழகத்தில் இன்று வரை விஸ்வாசம் படமே அதிகம் வசூல் செய்துள்ளது.
இந்த சாதனையை தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படம் முறியடிக்கும் என பலர் கூறி கொண்டிருந்த நிலையில், தற்போது அதற்கான வாய்ப்புகள் குறைவாகி கொண்டே வருகிறது. இந்த படமும் உலக அளவில் 300 கோடியை கடந்து விட்டது. ஆனால் தமிழகத்தில் இன்னும் விஸ்வாசம் படத்தின் வசூலை முறியடிக்க முடியாமல் சற்று திண்டாடி வருகிறது.
இனிவரும் நாட்களிலும் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளது. காரணம் தொடர்ந்து பெரிய படங்கள் வெளியாக இருப்பதால் பிகில் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. டைரக்டர் மற்றும் ப்ரொடியூசர் தனஞ்செயன் வெளியிட்டுள்ள பேட்டியில் விஸ்வாசம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 140 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் பிகில் திரைப்படம் தற்போது வரை தமிழகத்தில் ரூ 135 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. விஸ்வாசத்தை எட்டிப்பிடிக்க இன்னும் ஐந்து கோடிகளில் தேவை எனும் நிலையில் தற்போது உள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம்.. என்ன நடக்கிறது என்று.!
