Tamil Cinema News | சினிமா செய்திகள்
பணத்தை நானே கொடுத்துவிடுகிறேன், கண்ணாடி ஆக்ஷன் காட்சியை நான்தான் செய்வேன் அடம்பிடித்த அஜித்.!
அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார், திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது, அஜித் எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார் ரசிகர்களின் நலனுக்காக ரசிகர் மன்றத்தையே கலைத்தார், அஜித் அதேபோல் தனது வேலையில் எப்பொழுதும் சரியாக நடந்து கொள்வார் அனைவரிடமும் சிம்பிளாக பழகுவார்.
மேலும் பல பிரபலங்கள் அஜித்தை அருமையானவர் சிறந்தவர் திறமையானவர் என புகழ்ந்துள்ளார்கள் இதை அனைத்தும் நாம் காதுபட கேட்டுள்ளோம், சாதாரண நடிகராக மட்டுமில்லாமல் அஜித் ஸ்டான்ட் செய்வது பல ரசிகர்களுக்கு பிடிக்கும்.
இத்தனைக்கும் தனது உடம்பில் பல காயங்கள் பல ஆபரேஷன்கள் செய்திருந்தாலும் எந்த ஒரு டூப் இல்லாமலும் எல்லா ஆக்ஷன் காட்சிகளையும் தானே நடிப்பார் டூப் வேணாம் என கூறி விடுவார், அப்படித்தான் விசுவாசம் படத்தில் வரும் அனைத்து சண்டைக் காட்சிகளையும் அவரே நடித்துள்ளார் என ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் ஒரு பேட்டியில் கூறியுள்ளார், எந்த ஒரு கடினமான ஆக்ஷன் காட்சிகளாக இருந்தாலும் மீண்டும் ஒரு முறை என்றாலும் தானே தான் செய்வேன் என முன் நிற்பார்.
ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார், அவர் கூறியதாவது அமர்க்களம் படத்தில் என் அப்பாதான் ஸ்டண்ட், அந்த படத்தில் ஒரு காட்சியில் கண்ணாடியை உடைக்கும் சீன் இருந்தது, அப்பொழுது இருந்தது மிகவும் தடியான கண்ணாடி, அந்த காட்சியில் டூப் வைத்துக்கொள்ளலாம் என ஸ்டண்ட் மாஸ்டர் கூறினாராம், கண்ணாடி உடைபிர்க்கு அவர்களுக்கு ஸ்பெஷலாக பணமும் கிடைக்கும் எனவும் கூறினார்களாம்
ஆனால் எவ்வளவு சொல்லியும் அஜித் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை அதை உடைத்தால் எவ்வளவு பணம் கிடைக்குமோ அவர்களுக்கு நானே அந்த பணத்தை கொடுத்து விடுகிறேன் ஆனால் இந்த காட்சியை நான் தான் செய்வேன் என கூறி கடைசியில் அந்த ஆக்ஷன் காட்சியில் அஜித்தே நடித்தார் அந்த அளவிற்கு தனது வேலை மீது அக்கறை கொண்டவர்.
