Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரவு பகலாக காத்திருப்பதை கண்ட அஜித்!.. கண்டித்து அனுப்பி வைத்தார்
விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு, அதனை அஜித் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர். இதுவரை எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் வெளிவராமல் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்தான் நமது தல அஜித். எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் அஜித்தின் சினிமா செய்திகளை ட்விட்டர் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்து விடுவார்கள் விஸ்வாசமான ரசிகர்கள்.
விஸ்வாசம் படத்தில் தல அஜித்துடன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகி பாபு மற்றும் ரோபோ ஷங்கர் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இதனை டி.இமான் அவர்கள் இசை அமைத்துள்ளார் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கல் அன்று வெளியிடப்படும் என்பதை ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஸ்வாசம் படத்தின் டப்பிங் இரவு பகலாக போய்க் கொண்டிருப்பதை அறிந்த அஜித்தின் ரசிகர் பட்டாளங்கள் ஏவிஎம் ஸ்டூடியோவில் குவிந்தனர். அவர்கள் இரவு பகலாக காத்திருப்பதை கண்ட அஜித் கண்டித்து அனுப்பி வைத்தார். விஸ்வாசம் படத்தின் டப்பிங் வேலை இனிதே முடிவடைந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெருவித்தனர்.
