Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு தடவைதான் கண்ணா மிஸ் ஆகும்.. அதிரபோகும் விஸ்வாசம் மூன்றாவது லுக்..
தல அஜித்தின் விஸ்வாசம் பட இறுதிகட்ட சூட்டிங் மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் சிவா வேதாளம், வீரம், விவேகம் இப்பொழுது நான்காவதாக விஸ்வாசம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இரண்டு தினங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டது. போஸ்டர் நன்றாக இருந்தாலும் போஸ்டரில் நடந்த சிறு தவறால் பல கேலி, கிண்டலுக்கு ஆளானர்கள். இதனையடுத்து விரைவில் படத்தின் மூன்றாவது போஸ்டரை தயார் செய்யுமாறும் அந்த போஸ்டர் டிசைனை ஒப்புதல் பெற்ற பின்பு வெளியிடும்படி அறிவித்துள்ளார்.
மூன்று படம் எடுத்த பின்பும் நான்காவதாக ஒரு இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் தல தின் நம்பிக்கை அவர் ரசிகர்களின் மேல் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படையாக காட்டுகிறது. இந்த combo பொங்கல் 2019 வெளிவருகிறது என படக்குழு அறிவித்தது.
தளபதி தீபாவளிதான், பொங்கல் தல பொங்கல் தான் என்று தல தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
