Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் செகண்ட் லுக் வெளியானது.! புல்லட் திருவிழா கொண்டாட்டம்.!
தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் வருகிற பொங்கலுக்கு மிக பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், விவேக், என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது, ஏனென்றால் அஜித் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் அதுவே ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
மேலும் விஸ்வாசம் படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வராததால் அஜித் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தார்கள் ஆனால் கடந்த இரண்டு நாட்களாக விஸ்வாசம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது ஏனென்றால் விஸ்வாசம் செகண்ட் லுக் போஸ்டரை இன்று காலை 10.30 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள் அதேபோல் தற்போது விஸ்வாசம் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.
#AjithKumar #ThalaAjith @ThalaAjith_FC @AjithKumarArmy @AjithFans24x7 @AjithFansUpdate @AjithFC_TVL @ViswasamOffl @NayantharaU @Nayantharauu #Viswasam2ndLookFromToday #ViswasamThiruvizha #ViswasamSecondLook#bulletthiruviza pic.twitter.com/CARFV7BxXp
— Cinemapettai (@cinemapettai) October 25, 2018
இந்த போஸ்டர் வெளியானதிலிருந்து சமூக வலைதளத்தில் விஸ்வாசம் திருவிழா கொண்டாடி வருகிறார் ரசிகர்கள்.
