Connect with us
boomerang-movie

விசுவாசம் படத்தில் அனிருத் நீக்கப் பட்டதற்கு, இது தான் காரணமா ? கோலிவுட் கிசு கிசு.

anirudh-in-ajith-57

News | செய்திகள்

விசுவாசம் படத்தில் அனிருத் நீக்கப் பட்டதற்கு, இது தான் காரணமா ? கோலிவுட் கிசு கிசு.

‘விவேகம்’ படத்துக்குப் பிறகு, தல  அஜித் – சிறுத்தை  சிவா நான்காவதாக இணையும் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. விவேகத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸே தயாரிப்பதாகவும், ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி, தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அறிவிப்பு வந்தது.

Siva-and-ajith

Siva and Ajith, Vivegam Shooting spoy

சமீபத்திய அஜித் படங்களின் தலைப்பு எல்லாம் பாதி படத்திற்கு மேல் வளர்ந்த பின்னர் வெளியாகின. ஆனால் படம் துவங்கும் முன்னரே விசுவாசம் என அறிவித்து தல ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது  படக்குழு.  “VM” [VeeraM, VedhalaM,VivegaM, ViswasaM] செண்டிமெண்ட் இந்தப்படத்திலும் தொடர்ந்தது.

விவேகம் படத்திற்கு  கலவையான விமர்ச்சனங்கள் தான் வந்தது. இதை பற்றி அஜித்திடம் தயாரிப்பு தரப்பில் இருந்து  கேட்ட பொழுது,  அதற்கு  அஜித் இது சிவாவின் தவறு கிடையாது. நான் தான் அவ்வாறு எடுக்க சொன்னேன்,நான் சொன்னதை தான் சிவா செய்தார் என்று கூறி பழியை தானே ஏற்றுக்கொண்டார் என்ற  சில நாட்களுக்கு முன் தகவல் கசிந்தது .

ajith-director-siva

Thala Ajith & Director Siva

இந்நிலையில் வேதாளம், விவேகம் படத்துக்கு இசையமைத்த அனிருத் இப்படத்திற்கு வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.  இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவிருக்கிறார்

என்ன காரணம்  என்று விசாரரித்தால்,  விவேகம் படத்துக்கு இசை அமைக்கும் பொழுது  கமிட் செய்த நாளில், சொன்ன நேரத்தில் டியூன்    கொடுக்காமல் அநியாயத்துக்கு டிலே செய்தாராம்.

Anirudh Ravichandar

மேலும்  இசைநிகழ்ச்சி நடத்த வாய்ப்பு அமைந்ததால்,  விவேகம் பாடல்களை அவசர மாக முடித்துக்கொடுத்துவிட்டு இசை நிகழ்ச்சி வேளைகளில் ஆர்வம் காட்டினாராம். பின்னணி இசையும் படத்தில் சொதப்பியதற்கு அது தான் காரணம் என்கிறர்கள் படக்குழு சம்மந்தப்பட்டவர்கள். இந்த விஷயம்  அஜித் கேள்விப்பட்டதன் காரணத்தால் தான்  விசுவாசம் படத்திற்கு அனிருத்  வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் தல.

SivaKarthikeyan & Anirudh Ravichandran – Velaikkaran

சிவகார்த்திகேயன் படத்தில் வெளியான இறைவா பாடல் டியூ இன் விவேகம் படத்துக்காக தான் அனிருத் உருவாக்கினார் என்றும் பின்னர் தான் அந்தப் பாடலை  வேலைக்காரன் படத்திற்கு மாற்றி விட்டுவிட்டார் எனவும் கிசுகிசுக்கிறார்கள் இயக்குனர்  சிவா தரப்பினர்.

எது உண்மை என்று யாரேனும் நேரடியாக விளக்கம் அளிக்காத வரையில் அனிருத் பற்றிய இந்த விஷயம் கோடம்பாக்கத்தில் வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு நல்ல தீனி தான். இது ஒரு புறம் இருக்க பில்லா, ஆரம்பம்  படத்திற்கு  பின் யுவன் ஷங்கர் ராஜா அஜித்துடன் மீண்டும் இணைவதால், மகிழ்ச்சியில் உள்ளனர் தல ரசிகர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top