Tamil Cinema News | சினிமா செய்திகள்
வந்தது விசுவாசம் படத்தின் அப்டேட்.! அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில்.!
தமிழ் சினிமாவில் ஒன்றரை மாதமாக ஸ்ட்ரைக் நடைபெற்றது அதனால் கடந்த வெள்ளிகிழமை வரை எந்த தமிழ் திரைப்படமும் ரிலீஸ் ஆகவில்லை மேலும் படபிடிப்பும் நடக்கவில்லை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ட்ரைக் முடிந்துள்ளதால் தற்பொழுது தேங்கி கிடந்த திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிகொண்டிருகிறது.

ajith visuvasam
விசுவாசம் படத்தை பற்றி பல அறிவிப்புகள் வந்துகொண்டே இருந்தது ஸ்ட்ரைக்குக்கு முன்பு. தற்பொழுது ஸ்ட்ரைக் முடிந்து பல படத்தின் ஷூட்டிங் அரபித்துவிட்டது, ஆனால் விசுவாசம் படத்தின் ஷூட்டிங் எப்பொழுது தொடங்கும் எந்த தகவலும் வராத நிலையில் வருத்தத்தில் இருந்தார்கள்.
இந்த நிலையில் படத்தை பற்றி ஒரு தகவல் வெளிவந்துள்ளது, ஆம் விசுவாசம் படத்தின் பட பிடிப்பு எப்பொழுது தொடங்கும் என்ற தகவல் வெளிவந்துள்ளது, வருகிற மே 4 ம் தேதி தான் விசுவாசம் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தை பற்றி அறிவிப்பு வந்ததும் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்த்தில் இருக்கிறார்கள்.
