News | செய்திகள்
விசுவாசம் படத்தின் படபிடிப்பு எப்பொழுது தொடங்குகிறது தெரியுமா.!
தல அஜித் நடிக்க இருக்கும் படம் விசுவாசம் இந்த படத்தை விவேகம் படத்தை இயக்கிய சிவாதான் இந்த படத்தையும் இயக்குகிறார். படத்தின் டைட்டில் அறிவித்த படக்குழுவினர் பின்பு எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை.

ajith
அதனால் அஜித் ரசிகர்கள் படத்தை பற்றிய அறிவிப்பை சமூக வலைதளங்களில் விஸ்வாசம் படம் குறித்த கேள்விகளை பறக்கவிட்டு வந்தனர் ரசிகர்கள்.

ajith
மேலும் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தான் தயாரிக்க இருக்கிறது. படத்தை தயாரிக்க உள்ள டி.தியாகராஜன் சில அறிவிப்பை அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் கடந்த மூன்று மாதமாக மேற்கொண்டோம் இன்னும் அந்த பணிகள் நிறைவடையவில்லை.

ajith
இந்த பணி விரைவில் முடிய இருக்கிறது கதை அமைக்கும் வேலை முடிந்து விட்டால் படத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவலை வெளியிட முடியும் .
இந்த படம் வீரம் போல் இருக்கும் என சில தகவல் கூறுகிறது படத்தின் டைட்டில் அறிவித்த படக்குழு அதன் பின்பு எந்த அறிவிப்பும் அறிவிக்க வில்லை.மேலும் இந்த படத்தின் படபிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் 22ம் தேதி வியாழக்கிழமை தொடங்கும் என செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது.
