thala ajith
thala ajith

தல அஜித் தற்பொழுது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார், இவர் இதற்க்கு முன் சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படத்தில் நடித்துவிட்டார் இப்பொழுது நான்காவது முறையாக இணைந்துள்ளார்.

ajith
ajith

இந்த படத்தை வருகிற தீபாவளி தினத்தில் ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார்கள், படத்தின் டைட்டில் விசுவாசம் என அறிவித்தார்கள் அன்றில் இருந்து இன்று வரை ஷூட்டிங் தொடங்கவில்லை, படத்தில் நடிகையாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதாகவும், மேலும் யோகிபாபு, ரோபோ ஷங்கர் காமெடி நடிகர்களாகவும் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் என அறிவித்தார்கள்.

ajith

படத்திற்கு டி.இமான்  இசையமைக்க இருக்கிறார் இதை அதிகாரபூர்வமாக அவரே அறிவித்தார், படத்தை இதே கூட்டணியில் உருவான விவேகம் படத்தினை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தான் இந்த படத்தினை தயாரிக்கிறது இது அனைவரும் அறிந்ததே.

Ajith-Kumar

விவேகம் படம் சிவா இயக்கியதால் தொடர்ச்சியாக அவர் இயக்குவதை தயாரிப்பு தரப்பில் விரும்பவில்லை அதனால் அவரை மாற்ற அஜித்திடம் கூறியிருக்கிறது சத்யஜோதி பிலிம்ஸ் ஆனால் தனது நண்பர் சிவாவை விட்டுகொடுக்க மனமில்லாமல் அஜித் சிவாதான் இயக்குனர் என கூறிவிட்டார்.

ajith visuvasam

இதனால் தயாரிப்பு தரப்பிற்கும் அஜித்திற்கும் சின்னதாக மோதல் உருவாகியுள்ளது படத்தின் தலைப்பை அறிவித்து பல மாதம் ஆகியும் இன்னும் சூட்டின் தொடங்காமல் இருப்பதற்கு காரணம் இதுதான் இந்த மோதல் நீடித்தால் இந்த படம் கைவிடப்படும் என கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.