காலா படத்தில் ரஜினியுடன் நடித்த சாக்‌ஷிக்கு அடுத்த படமாக விஸ்வாசம் கிடைத்து இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பெங்களூரை பிறப்பிடமாக கொண்ட சாக்‌ஷி அகர்வால் மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர். 100க்கும் அதிகமான டிவி விளம்பரங்களிலும், முக்கிய நிறுவனங்களுக்கான போட்டோ ஷோட்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னர் கன்னடாவில் இரண்டு படங்களில் நடித்து இருக்கிறார். இதை தொடர்ந்து, யோகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சில படத்தில் நடித்த போதிலும் சாக்‌ஷிக்கு சரியான வரவேற்பு ஏற்படவில்லை.

Sakshi-Agarwal
Sakshi-Agarwal

இந்த நேரத்தில் தான், அவருக்கு பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் காலா படத்தின் வாய்ப்பு கிடைத்தது. ரஜினிகாந்த் படம் வேறு, யார் வேண்டாம் எனக் கூறுவார். டபுள் மகிழ்ச்சியில் படத்தில் நடித்தும் முடித்து விட்டார் சாக்‌ஷி. படத்தில் தனக்கு நல்ல கதாபாத்திரம் தான் கிடைத்து இருக்கிறது. அதை நீங்கள் திரையரங்கில் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சாக்‌ஷி அகர்வாலுக்கு அடுத்த பம்பர் லக்காக அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க இருக்கும் படம் விஸ்வாசம். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இம்மாத முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து இருக்கிறது. இப்படப்பிடிப்பில் அஜித்தின் முதுமை தோற்ற காட்சிகள் தான் படமாக்கப்பட்டதாம்.

மாம்பழம் வாங்க இங்கே கிளிக் செய்யவும்:

இதை தொடர்ந்து, விரைவில் தொடங்க இருக்கும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் இளமையான அஜித் குறித்த காட்சிகள் எடுக்கப்பட இருக்கிறது. இந்த கதாபாத்திரத்திற்கு சாக்‌ஷி தான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து பேச்சுகள் அடிப்பட தொடங்கி இருக்கிறது. சாக்‌ஷி சமீபத்தில் தனக்கு பிடித்த நடிகர் அஜித் தான் எனக் கூறி இருந்தார். பொண்ணுக்கு உடனே இப்படி ஒரு லக்கா என பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

அப்போ, வயதான அஜித்திற்கு தான் நயன்தாரா நாயகியாக அல்லது அஜித்தின் ஜோடியாகவே இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். எல்லாவற்றுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.