ajithvisuvasam

அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தீபாவளிக்கு இல்லை என நெருங்கிய வட்டாரங்கள் கிசுகிசுக்கிறது.

Visuvasam
Visuvasam

இயக்குனர் சிவாவின் விவேகம் படத்தை தொடர்ந்து, அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். இதற்கு முன்னரே, வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து இருவரின் கூட்டணியில் படங்கள் வெளியாகி இருக்கிறது. நான்காவது முறையாக இக்கூட்டணி அறிவிக்கப்பட்டதும், ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தில் அஜித்தின் நாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். முதன்முறையாக அஜித்தின் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்காக, பல நாட்களாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்த அஜித் புது ஹேர்ஸ்டைலுடன் களமிறங்க இருக்கிறார். இதை தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் இருந்து பல காரணங்களால் தள்ளிப்போனது. கடந்த மாதம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட படப்பிடிப்பும், தயாரிப்பாளர்களின் போராட்டத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதிகம் படித்தவை:  விவேகம் படம் முடிந்தது.! "தலை விடுதலை " பாடல் வெளியீடு அதிகாரபூர்வ அறிவிப்பு..

முன்னதாக, இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, படப்பிடிப்பே மே மாதத்தில் தொடங்க இருப்பதால், தீபாவளிக்குள் முடிக்கப்படுவது எளிது இல்லை எனவே கூறப்படுகிறது. விவேகம் படத்தின் விமர்சனம் சரியாக இல்லாததால், இப்படத்தில் இயக்குனர் சிவா அதிக கவனம் செலுத்தவே நினைப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதே போட்டியில் இருந்த சூர்யாவின் என்.ஜி.கே மற்றும் விஜய்62 படங்களின் படப்பிடிப்பு 40 சதவீதத்திற்கும் அதிகமாக முடிக்கப்பட்டு இருக்கிறது. அதனால், அவர்கள் படம் தீபாவளி ரிலீஸில் களமிறங்கினாலும், கண்டிப்பாக விஸ்வாசம் படம் இந்த ரேஸில் இடம்பிடிப்பது நடக்காது. தொடர்ந்து, நாயகி நயந்தாரா கையிலும் அரை டஜனுக்கும் அதிகமான படங்களை வைத்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் போராட்டத்தால் அவராலும் தொடர்ந்து கால்ஷூட் கொடுக்க முடியாத சூழலும் இருக்கிறது. இதனால், இப்படத்தின் ரிலீஸ் வரும் ஆங்கில புத்தாண்டை குறி வைத்தே இருக்கும் என படக்குழு தரப்பில் கிசுகிசுக்கப்படுகிறது.

அதிகம் படித்தவை:  தல58 மற்றும் தளபதி62 ஒரே நாளில் தொடங்கி, ஒரே நாளில் ரிலீஸ்.! சிவா, முருகதாஸ் பல பரீட்சை.!
Visuvasam
Visuvasam

இருந்தும், தீபாவளிக்கு அஜித்திடம் இருந்தும் எதும் அறிவிப்பை அவர் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதால் அந்நாளில் டீசரை வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை விஸ்வாசம் படக்குழு தட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.