நடிகர் அஜித்குமார் விவேகம் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை வீரம்,விவேகம் படத்தை இயக்கிய சிவா இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

ajith-mankatha
ajith-mankatha

படத்தின் திரைக்கதை மற்றும் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதுமட்டும் இல்லாமல் பிப்ரவரி 22 ம் தேதி படத்தின் படபிடிப்பு தொடங்கும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

mankatha-ajith-thala

இந்த நிலையில் அஜித் விசுவாசம் படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது இதனை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள் இந்த வாரம் அஜித் ரசிகர்கள்  எதிர்பாத்த தகவல் வெளியாகும் என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் தியாகராஜன் கூறியிருந்தார் ஆனால் இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை.

ajithpolice

படத்தின் நடிகை மற்றும் வில்லன் யார் யார் நடிக்க போகிறார்கள் என எந்த அறிவிப்பும் இதுவரை அறிவிக்கவில்லை ஆனால் திரைக்கதை தயாரிப்பதில் மொத்த படகுழுவும் முழுமையாக மூழ்கியுள்ளது விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என கூறுகிறார்கள்.