அஜித்தின் விசுவாசம் படத்திற்கு டி.இமான் தான் இசையமைக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும், இமான் பாடல் என்றாலே ஹிட் அடித்துவிடும் அதனாலேயே இவர் வருடத்திற்கு 5 படத்திற்காவது இசையமைத்து விடுவார்.

visuvasam
visuvasam

இவருக்கு தற்பொழுது ஜாக்பாட் அடித்துள்ளது அதனால் தான் தல படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது, படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க போகிறார், இசையமைப்பதை பற்றி இமான் கூறியதாவது.

நான் எப்பொழுதும் பெரிய நடிகர்கள் படங்களுக்கு இசையமைக்க விரும்புவேன், அதனால் விசுவாசம் படம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீண்ட நாளாக அஜித்துடன் பணியாற்ற ஆசை, இது எனக்கு நல்ல வாய்ப்பு கண்டிப்பாக மாஸ் பாடல் இருக்கும் படத்தில் அதே நேரத்தில் என் ஸ்டைலில் மெலடி பாடல்களும் இருக்கும்.

அதுமட்டும் இல்லாமல் தல படத்தில் எப்பொழுதும் தீம் மியுசிக் இருக்கும் இந்த முறை தீம் மியுசிக் மாஸாக இருக்கும் என அறிவித்துள்ளார்.