சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் படம் விசுவாசம் படம் சினிமா ஸ்ட்ரைக் முடிந்த பிறகு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது, விசுவாசம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார் மேலும் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார், அவருடன் இணைந்து பிரபல கிட்டார் இசைக் கலைஞரான கெபா ஜெரோமியாவும் பணியாற்றி வருகிறார்.

ajithvisuvasam

படத்திற்கு செட் மட்டும் 3 கோடி செலவில் போடப்பட்டுள்ளது, படத்தில் சில பாடலை முடித்துவிட்டார் இமான் , மேலும் சில மியூசிக் போட்டுவருவதாக கிட்டார் இசைக்கலைஞர் கெபா ஜெரோமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை போட்டுள்ளார் இந்த தகவல் இணையத்தில் காட்டு தீயாய் பரவியது ஆனால் திடீரென அந்த ட்விட் டெலிட் செய்யப்பட்டுள்ளது நடிகர் அஜித் கண்டிசன் போட்டுள்ளதால் தான் அந்த ட்விட்டை நீக்கியுள்ளார் கெபா ஜெரோமி என கூறுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

தல அஜித் படத்தை பற்றி எந்த தகவலும் வெளியிடவேணாம் அதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும், ஆவலும் ரசிகர்களிடம் எல்லை மீறி செல்கிறது அதனால் படத்தை பற்றி எந்த செய்தியையும் வெளியிடக்கூடாது என ஸ்ட்ரிக்டாக கண்டிஷன் போட்டுள்ளாராம் அஜித், படத்தை பற்றிய அறிவிப்பு வருமா? வராதா? தெரியலேயே.