fbpx
Connect with us

Cinemapettai

கடைசிவரை நிறைவேறாமல் போன விசுவின் ஆசை.. அது மட்டும் சூர்யா காதில் விழுந்திருந்தால் போதும்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கடைசிவரை நிறைவேறாமல் போன விசுவின் ஆசை.. அது மட்டும் சூர்யா காதில் விழுந்திருந்தால் போதும்

கொரோன வைரஸின் பரபரப்பான சூழ்நிலையில் தமிழ் சினிமா மிக முக்கியமான இயக்குனர் விசுவை இழந்தது. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இவர் மறைவிற்கு பல சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.

தமிழ் சினிமாவில் விசு போன்ற இயக்குனர்கள் பார்ப்பது மிகவும் அரிது. அந்த வரிசையில் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் குடும்ப கதாபாத்திரங்களாக இருக்கும். கூட்டுக்குடும்பம் என்றால் என்ன என்பதை இவர் இயக்கிய படங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

காலப்போக்கில் நம் குழந்தைகள் கூட அதை பார்த்து கற்றுக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம். மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற படங்களில் இவர் இயக்கிய பெண்மணி அவள் கண்மணி, சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு, கெட்டிமேளம், புதிய சகாப்தம், வேடிக்கை என் வாடிக்கை, பட்டுக்கோட்டை பெரியப்பா ஆகிய படங்கள் அடங்கும்.

முக்கியமாக இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் தேசிய அளவில் விருதுகளை தட்டி சென்றது. இறப்பதற்கு முன்பு வரை கடைசி ஆசை ஒன்றை நிறைவேறாமல் போய் விட்டதாம் அதாவது தேசிய விருது பெற்ற சம்சாரம் அது மின்சாரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக கதைகளை தயார் செய்துள்ளார்.

இந்தக்கதையை பல நடிகைகளிடம் கூறியுள்ளாராம் அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர் உறுதி செய்யும் சூழ்நிலையில் இருந்து கடைசியாக ஜோதிகாவின் கையில் இந்த கதை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவரின் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது இந்த சூழ்நிலையில் ஜோதிகா இந்த படத்தில் நடித்து சூர்யா அதை தயாரித்தால் கண்டிப்பாக விசுவின் கடைசி ஆசை நிறைவேறுவது மட்டுமல்லாமல் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. இதில் மணல் கயிறு என்ற படத்தின் இரண்டாம் பாகத்தை 2016ஆம் ஆண்டு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top