kamal

விஸ்வரூபம்

2013ல் கமல்ஹாசன் நடித்து, இயக்கி பல சர்ச்சைகளுக்கு பின்னர் வெளியாகி . மிகப் பெரிய வெற்றி பெற்ற ப்டம் ‘விஸ்வரூபம்’. இதன் இரண்டாவது பாகமும் கிட்டத்தட்ட தயாராகி விட்டதாம்.

Vishwaroopam 2

முதல் பாகத்தை எடுக்கும் போதே இரண்டாவது பாகத்துக்கான 60 சதவிகித படப்பிடிப்பை கமல் முடித்துவிட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் ஆஸ்க்கார் ரவிச்சந்திரன் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படத்தின் வெளியீடு பற்றி எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. பின்னர் கமல்ஹாசன் படத்தின் உரிமையை தானே வாங்கினார். அதன் பின் புதிய போஸ்டர் வெளிவந்தது.

vishwaroobam_cinemapettai
vishwaroopam

மேலும் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள், சில காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு நிறைவு பெற்று, போஸ்ட் புரொடெக்‌ஷன் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

அதிகம் படித்தவை:  சாவித்ரியை இயக்கும் கேப்டன் பாகுபலி..குஷியில் ரசிகர்கள்
vishwaroopam 2

தற்போது விஸ்வரூபம் 2 படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாக இருப்பதாக ராஜேஷ் செல்வா தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ராஜேஷ் செல்வா உத்தமவில்லன், விஸ்வரூபம் படங்களில் கமலின் உதவி இயக்குநரும். ‘தூங்கா வனம்’ படத்தின் இயக்குநர் ஆவர்.

அதிகம் படித்தவை:  Archana Latest Stills
viswaroopam 2

இந்த ட்ரைலரை கமலின் புதிய யூ டியூப் சானலில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

கமல் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து, தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். இந்நிலையில் புதிய யூ டியூப் சேனல் ஆரம்பித்துள்ளது ஒரே கல்லில் இரட்டை மாங்கா அடிக்கத்தான் என்பது மட்டும் உறுதி.

இந்நிலையில் ட்ரைலர் ரிலீஸ் குறித்து பல தேதிகள் வதந்தியாக சொல்லப்படுகின்றது. எது சரியான தேதி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.