பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுற்றதைத் தொடர்ந்து, ‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, தற்போது கிராபிக்ஸ், பின்னணி இசைக் கோர்ப்பு உள்ளிட்ட பணிகளே தற்போது நடைபெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரெய்லர், கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் ஜிப்ரான், (நவம்பர் 3) மாலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ‘விஸ்வரூபம் 2’ தொடர்பான கேள்விக்கு அவர் பேசியிருப்பதாவது:

vishwaroopam

’விஸ்வரூபம் 2′ ஆல்பம் ஒரு சினிமா அனுபவமாக இருக்கும். நான் உங்களுக்கு ஒரு ரகசியத்தைக் கூறுகிறேன். கமல் சார் இப்படத்தில் கர்நாடக சங்கீதத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

அப்பாடல் வெளியான பிறகு கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் கமல் சார் எவ்வளவு திறமை மிக்கவர் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

நீங்கள் எதிர்பார்த்ததைவிட ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் விரைவில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியடையும். படத்தின் வெளியீட்டு தேதி குறித்து கூற எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் படத்தின் ட்ரெய்லர் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ட்ரெய்லர் அருமையாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்கள் அனைவரையும் பிரமிக்க வைக்கும்.

vishwaroopam
vishwaroopam

இவ்வாறு ஜிப்ரான் தெரிவித்திருக்கிறார்.

விஸ்வரூபம்-2 ரிலீஸ் விவரம்:

கமலுக்கும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக பல வருடங்களாக முடங்கிக் கிடக்கிறது – ‘விஸ்வரூபம்-2’. பின்னர் ஆஸ்கார் ரவிக்கு செட்டில் பண்ணிவிட்டு லைகா மூலம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் கமல் என்று சொல்லப்பட்டது.

அதை மெய்ப்பிப்பது போல் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் ‘விஸ்வரூபம்-2’ பட வேலைகள் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

kamal

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை கமல் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ‘விஸ்வரூபம்-2’ மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘விஸ்வரூபம்-2’ படத்தை லைகா வெளியிடும் பட்சம் 2.0 வெளியான சில வாரங்களில் இப்படத்தை வெளியிடவுள்ளார் கமல்ஹாசன் என்கிறார்கள். ‘விஸ்வரூபம்-2’ படம் வெளியானதும் ‘சபாஷ் நாயுடு’ படத்தை முடித்துவிட்டு ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன்-2’ படவேலைகளில் களமிறங்கவிருக்கிறார் கமல்ஹாசன்.