விஸ்வரூபம்

கமல்ஹாசன் இயக்கி, நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம், 2013-ல் வெளியானது. பல பிரச்சனைகள் மற்றும் பல்வேறு தடைகளை தாண்டி தான் இப்படம் ரிலீஸ் ஆனது. எனினும் இப்படம் ரசிகர்களின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

kamal haasan

முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 60 சதவிகித படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக அப்பொழுதே கூறப்பட்டது. எனினும் தயாரிப்பாளர் பிரச்சனை, மற்றும் பல்வேறு காரணத்தால் மீண்டும் ஷூட்டிங் செல்லவில்லை என்று கூறப்பட்டது. படம் பாதியிலேயே நின்றது. பின்னர் கமல்ஹாசன், தானே ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து ‘விஸ்வரூபம் 2’ படத்தை வாங்கி போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை ஆரம்பித்தார். சில மாதங்களுக்கு முன்பே இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் கமல்.பின்னர் கடந்த மாதம் விஸ்வரூபம் 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் Officers Training Acadamey (OTA ) வில் நடைபெற்றது.

தற்பொழுது இப்படத்தின் சவுண்ட் மிக்ஸிங் வேலைகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றது. கமல் தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது ..
“விஸ்வரூபம் 2 பார்ப்பதற்கும், கேட்பதற்கும் மிக நன்றாக உள்ளது. இது சாத்யமாவதற்காக உழைக்கும் அணைத்து டெக்னீஷியன்களுக்கும் என் நன்றிகள். மார்ட்டி, நான், குணால் மற்றும் கிறிஸ். திரையில் தயாரிப்பாளர் பெயராக மறைந்த எனது சகோதரரின் பெயர் உள்ளது. அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தப் புகைப்படத்தை அவரிடம் காட்டியிருப்பேன்.” என்றார்.

இப்போதைக்குப் படம் ரிலீஸாகாது என அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கி, மீதி காட்சிகளை முடித்துவிட்ட கமல்ஹாசன், அமெரிக்காவில் சவுண்ட் மிக்ஸிங்கில் பிஸியாக உள்ளார். நாளொன்றுக்கு 15 மணி நேரத்தையும் தாண்டிய பரபர வென்று வேலை செய்து வருகிறார். ‘விஸ்வரூபம் 2’ விரைவில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு இப்பொழுது ஏற்பட்டுள்ளது.