fbpx
Connect with us

Cinemapettai

வைரல் ஆகும் கமல் – ஆண்ட்ரியாவின் ‘விஸ்வரூபம் 2’ ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.

News | செய்திகள்

வைரல் ஆகும் கமல் – ஆண்ட்ரியாவின் ‘விஸ்வரூபம் 2’ ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.

சில நாட்களாகவே உலக நாயகன் கமலஹாசன் என்ற பெயர் மாறிவிட்டது . சர்ச்சைகளில் நாயகன் என்று தான் இன்று அவரை அழைக்க வேண்டும்.

கமலஹாசன்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே இணையத்தில் எந்நேரமும் ட்ரெண்டிங் ஆகிவிட்டார் மனிதர். ஒரு புறம் சமூக நலன். மறுபுறம் அரசியல் பிரிவேசம் என்று செயல் பட்டு வருகிறார். இந்தியன் 2 அறிவிப்பு வந்தது, உடனே தயாரிப்பாளர் மாற்றப்பட்டார்; இன்று என்ன நிலை என்று யாருக்கும் தெரியாது. ஒருபுறம் சபாஷ் நாயுடு, மறுபுறம் கிட்டத்தட்ட நான்கு வருடமாக கிடப்பில் கிடக்கும் விஸ்வரூபம் ௨. இவர் ட்விட்டரில் போடும் ஸ்டேட்டஸ் போல், இவரின் எந்த படம் அடுத்து வெளிவரும் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர் கமல் ரசிகர்கள்.

விஸ்வரூபம்

கமல்ஹாசன் இயக்கி, நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம், 2013-ல் வெளியானது. பல பிரச்சனைகள் மற்றும் பல்வேறு தடைகளை தாண்டி தான் இப்படம் ரிலீஸ் ஆனது. எனினும் இப்படம் ரசிகர்களின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 60 சதவிகித படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக அப்பொழுதே  கூறப்பட்டது. எனினும் தயாரிப்பாளர் பிரச்சனை, மற்றும் பல்வேறு காரணத்தால் மீண்டும் ஷூட்டிங் செல்ல வில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பே இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் கமல்.

Vishwaroopam

விஸ்வரூபம் 2

Officers Training Acadamey – Chennai- Viahwaroopam2 Shooting

இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. இதனை கமலே தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோவுடன் தெரிவித்துள்ளார் …

`விஸ்வரூபம் – 2 தமிழ் மற்றும் இந்தி பாதிப்புக்கான ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு. ஆர்வமாக உள்ளேன்.      OTA  சென்னை. பெண் ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் நாட்டின் ஒரே பயிற்சி மையமான சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தால் நானும் இந்த நாடும் பெருமையடைகிறோம். பெண்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன், குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த நமது பாரத தாய் . மா துஜே சலாம்’ என்று கமல் பதிவிட்டுள்ளார்.

ஆண்ட்ரியாவும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோ மற்றும் விடியோவை பதிவிட்டுள்ளார்.

After a long long wait, #Vishwaroopam2 is finally back on track !!! Loving my look & all the cool stuff I get to do on set with the one & only #kamalhaasan ☺️☺️☺️ Cheers to the #OTA ?? #realheroes #lovemyjob #seeyouatthemovies #2018

One of the things I love about being an actor is that I get to experience so much in the course of my work ! #horseriding has been on my list for a while now, and thanks to #Vishwaroopam2 & the #ota , I’ve found a new hobby ?? #setlife #lovemyjob

OTA – ஆஃபீஸ்ர்ஸ் ட்ரைனிங் அகாடமியில் ஒரு வாரம் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . விஸ்வரூபம் முதல் பாகத்தை  விட இரண்டாம் பாகத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும். ஒரு வாரத்துடன் ஷூட்டிங் முடிந்து பிற கு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்படும். ட்ரெய்லரை மற்றும்  இசை வெளியீடு இந்த  மாத இறுதியில் நடக்க வாய்ப்பு அதிகம் என்கிறர்கள்.

படப்பிடிப்பு வேலைகள் தொடங்கி வேகம் பெற்றுள்ளதால் விஸ்வரூபம் – 2 படம் அடுத்தாண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். விஸ்வரூபம்  ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து ரிலீஸானது. விஸ்வரூபம் 2 எப்படியோ?

லெட்ஸ் வெயிட் & வாட்ச்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top