கமல் இயக்கி நடித்த படம் விஸ்வரூபம்,பல தடைகளுக்கு கடந்து பிரம்மாண்ட வெற்றி படமானது.

அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, கமல் இயக்கி நடிக்க ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில் “விஸ்வரூபம் 2” படம் தயாரானது. பாதி படம் வளர்ந்த நிலையில் “விஸ்வரூபம்-2” படம் முடங்கிப்போனது. “விஸ்வரூபம்-2” படம் எப்போது ரிலீசாகும் என்று ஏங்கி தவித்த கமல் ரசிகர்களும் ஒருகட்டத்தில் அதை மறந்துவிட்டனர்.

இந்நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு செய்தி!  தற்போது “சபாஷ் நாயுடு” படத்தை இயக்கி, நடித்து வரும் கமல்ஹாசன் “விஸ்வரூபம்-2” படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்ய முடிவு செய்து, அதற்கான வேலைகளை வேகப்படுத்தியுள்ளாராம்.  அதாவது தீபாவளிக்கோ அல்லது அதற்கு முன்னரோ  “விஸ்வரூபம்-2” படத்தை ரிலீஸ் செய்ய கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளாராம்.