fbpx
Connect with us

Cinemapettai

‘விஸ்வரூபம் 2’ என்ன நிலையில் உள்ளது? முழு தகவல்

‘விஸ்வரூபம் 2’ என்ன நிலையில் உள்ளது? முழு தகவல்

vishwaroopam2கமல் நாளை மறுநாள் புதிய படங்களைத் தொடங்குகிறார். இது அவரது ராஜ்கமல் நிறுவனத்தின் 41, 42, 43 வது படங்கள் என்று விளம்பரங்கள் சொல்கின்றன. லைகாவும் கமலுடன் இணைந்து இந்தப் படங்களைத் தயாரிக்கிறது. சரி, விஸ்வரூபம் 2 என்று ஒரு படம் தயாரித்து இயக்கி நடித்தாரே கமல் ஹாஸன்… அந்தப் படம் என்னதான் ஆனது?

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கிடப்பில் உள்ள படம் இது. விஸ்வரூபம் முதல் பாகம் எடுக்கப்பட்ட போதே, இந்த இரண்டாம் பாகத்தின் பாதிப் படத்தை எடுத்துவிட்டார் கமல் ஹாஸன்.

2015-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் படம் குறித்த பேச்சே இல்லை. அப்போதுதான் இந்தப் படம் குறித்த சில விஷயங்களை பத்திரிகைகளிடம் பகிர்ந்து கொண்டார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். படம் முழுமையடையவில்லை என்றும், இன்னும் பத்து சதவீத படப்பிடிப்புக்கு பணம் வேண்டும் என கமல் கேட்டதால் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஒரு கட்டத்தில், படத்தை யாரிடமாவது கைமாற்றும் மனநிலையில் இருப்பதாகவும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறினார். அப்போது ‘மீதிப் படத்தையும் முடித்து நானே வெளியிட்டுக் கொள்கிறேன்’ என கமல் கூறிவிட்டதாகத் தெரிகிறது.

படத்துக்கு நான் செலவழித்த தொகையை திருப்பிக் கொடுத்துவிடுங்கள்.. வட்டி கூட வேண்டாம் என்று ஆஸ்கர் ரவிச்சந்திரன் பதிலுக்குக் கூற, அதே நிலையில் விஸ்வரூபம் 2 நிற்கிறது. இந்த நேரத்தில்தான் கமல் தனது மூன்று புதிய படங்களை அறிவித்துள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top