விஸ்வரூபம்-2 திரைவிமர்சனம்.!

விஸ்வரூபம் பல தடைகளை தாண்டி 2013 ம் ஆண்டில் வெளியாகிய திரைப்படம் இந்த படம் ஹாலிவுட் தரத்தில் எடுத்துள்ளார்கள் என்று கூறமுடியாமல் ஹாலிவுட் படத்தை பார்த்தது போல் இருக்கும் அளவிற்கு பக்காவாக எடுத்த திரைப்படம் படத்தின் முதல் பாகத்தில் கமல் பல கேள்விகளுக்கு விடை தராமல் படத்தை முடித்திருப்பார் மேலும் முதல் பாகத்தில் படத்தில் இந்த போர் நிற்க வேண்டும் என்றால் நான் சாக வேண்டும் அல்லது உமர் சக வேண்டும் என்பார்.

Vishwaroopam-2
Vishwaroopam-2

இந்த நிலையில் இன்று விஸ்வரூபம்-2 ரிலீஸ் ஆகியுள்ளது இதில் முதல் பாகத்தில் கமல் சொன்னது போல் போர் நின்றதா என்பதை பார்க்கலாம்.

படத்தின் கதை.

படம் முழுவதும் முதல் பாகத்தில் இருக்கும் சில காட்சிகளை காமித்துவிட்டு தற்பொழுது உள்ள காட்சிகளை காட்டுகிறார்கள், ஆம் முதல் பாகம் தற்பொழுதைய காட்சி என மாறி மாறி காட்டுகிறார்கள். இந்த நிலையில் படத்தின் முதல் பாதியில் கமல் எப்படி தீவிரவாதி கும்பலில் இணைந்தார் என்பது தெளிவாக காட்டவில்லை.

படம் ஆரம்பத்திலேயே கமல் ஆண்ட்ரியா, பூஜாகுமார் ,ஆகியோர் லண்டன் புறப்பட்டு செல்கிறார்கள் அப்பொழுது கமல் தனக்கு முன்பு நடந்ததை நினைத்து பார்கிறார், ராணுவத்தில் ஆண்ட்ரியாவுக்கு உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார் கமல், அப்பொழுது அவருடன் காதல் ஏற்படுகிறது இதனால் இருவரும் தனியறைக்கு செல்வதுபோல் நடிக்க அதனால் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டு சிறைக்கு செல்கிறார்.

மேலும் அங்கிருந்து தப்புவது போலவும் ஆப்கானிஸ்தானில் தேடப்படும் குற்றவாளி போல் செல்கிறார் அங்கு வில்லன் உமருடன் செய்வதை முதல் பாகத்திலேயே பார்த்திருக்கிறோம்.பின்னர் உமர்க்கு உண்மை தெரிந்து அவர் அங்கிருந்து தப்பிய கதை எல்லாம் வருகிறது. நிகழ்காலத்தில் லண்டனுக்கு நேரவிருக்கும் பெரிய பேராபத்தை தடுக்கிறார். இதையடுத்து உமரின் மற்ற சதியை முறியடித்து அவரை கொன்றாரா என்பதே மீதி விஸ்வரூபம்.

படம் முழுவதும் சண்டை காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை படம் முழுவதும் தேசப்பற்று வெவ்வேறு வடிவத்தில் அழகாக காட்டியுள்ளார்கள் படத்தின் முதல் பாடலே ராணுவ பயிற்ச்சியும், கமல் செய்யும் ரோமன்ஸ் தான், மேலும் படத்தில் குறிப்பிட்ட சாதிகள் தான் உயர் பதவியில் இருக்கிறார்கள் என அவாளை கொஞ்சம் கிண்டல் செய்துள்ளார்கள்.

மேலும் முதல் பாகத்தில் வந்த சண்டை காட்சிகளை மீண்டும் முயற்சி செய்துள்ளார்கள் டெக்னிக்கலாகவும் பல இடங்களில் Freezing Shot, ரிவர்ஸில் சென்று ஸ்லோமோஷனில் காட்டுவது என அசத்தியுள்ளனர். படத்தில் கமர்ஷியல் அதிகமாக இல்லை பாடல்களும் தொந்தரவு செய்யும் அளவிற்கு இல்லை, நானாகிய நதிமூலமே என்ற பாடல் கொஞ்சம் எமோஷன் அதிக படுத்துகிறது.

ஜிப்ரான் படத்தின் பின்னணி இசையில் அசத்தியுள்ளார் மேலும் கமல் அனைவருக்கும் தெரியும் அற்புதமாக நடிப்பார் இந்த படத்திலும் அசத்தியுள்ளார் ஆண்ட்ரியாவும் சண்டைகாட்சிகளில் அசத்தியுள்ளார் கடைசியில் இவரின் முடிவு கொஞ்சம் சோகத்தை ஏற்படுத்துகிறது. பூஜாகுமார் முதல் பாகத்தைவிட இதில் படம் முழுவதும் டிராவல் ஆகிறார். ரொமான்ஸ் காட்சியில் ஸ்கோர் செய்கிறார்.

வில்லன் ராகுல் போஸ் இரண்டாம் பாதியில் அவரின் காட்சி அதிகமாக வருகிறது வில்லத்தனமும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது, வசனத்தில் கமல் அசத்தியுள்ளார், படத்தில் சண்டைகாட்சிகள் அனைவரையும் ரசிக்கவைக்கிறது, மேலும் பின்னணி இசையில் அசத்தியுள்ளார்கள்.

படத்தில் சில காட்சிகள் கிராபிக்ஸ் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது மேலும் கொஞ்சம் அடித்தட்டு மக்களுக்கு சில காட்சிகள் புரியாமல் இருக்குமோ என சந்தேகம் வருகிறது.மொத்தத்தில் விஸ்வரூபம்-2 ரசிகர்களிடம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
விஸ்வரூபம்-2 திரைவிமர்சனம்: 3 / 5