Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரச்சனையின்றி வெளியாகும் விஸ்வரூபம் இரண்டாம் பாகம்.. ஐயத்தில் கமலியன்ஸ்

கமல் நடிப்பில் வெளியாக இருக்கும் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாக ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
உலக நாயகன் கமல் நடித்து, தயாரித்திருந்த விஸ்வரூபம் படம் கடந்த 2013ம் ஆண்டில் வெளியானது. தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் பூஜா குமார் ரீ-எண்ட்ரி கொடுத்தார். ஹாலிவுட் படத்துக்குச் சவால் விடும் தொழில்நுட்ப நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டிருந்த அந்த படம் வெளியீட்டின்போது சில சிக்கல்களைச் சந்தித்தாலும், ரசிகர்களின் பெருவாரியான ஆதரவுடன் சூப்பர்ஹிட் ஆனது. ஆப்கானிஸ்தான், அமெரிக்கா என பல்வேறு இடங்கள் தமிழ் சினிமாவில் காட்டப்படாத புதிய இடங்களில் ஷூட் செய்யப்பட்டது. நடனக் கலைஞர், உளவுத் துறை அதிகாரி என பல பரிணாமங்களில் கமல் மிரட்டியிருப்பார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படும் என கமல்அறிவித்தார்.
ஆனால், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் பல நாட்களாக முடிக்கப்படாமல் இருந்தது. இதை தொடர்ந்து, சமீபத்தில் இதன் வேலைகளை கமல் பரபரப்பாக நடத்தி முடித்தார். ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் படத்தை தயாரித்துள்ளார்.கமல்ஹாசனுடன், அதுல் திவாரி இணைந்து இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கின்றார்.
இந்த நிலையில், விஸ்வரூபம்2 படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது. அதன் மூலம், படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை வெளியான படத்தின் ட்ரைலரை இந்தியில் அமீர்கானும், தமிழில் ஸ்ருதி ஹாசனும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
