????????????????????????????????????

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என பல்வேறு இடங்களிலும் தொடந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றுகூடி நடத்தி வரும் இப்போராட்டத்துக்கு தமிழ் திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களிலும் அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டு குறித்து கருத்து தெரிவித்து வருவதால் உலக அளவில் “ஜல்லிக்கட்டு” என்ற ஹேஷ்டேக் முன்னிலையாக இருந்துவருகிறது.

இப்போராட்டம் குறித்து நட்சத்திர சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது மாநிலம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. ஒற்றுமையாக, அமைதியாக போராடுகின்றனர். தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

அடுத்த தலைமுறையினர் நவீனமாகவும் அதே சமயம் கலாச்சார வேர்களை விடாதவர்களாகவும் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.