Visuvasam
Visuvasam

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஸ்வாசம் படக்குழு…

இயக்குநர் சிவா – அஜித் கூட்டணி நான்காவது முறையாகக் கைகோர்த்திருக்கும் படம் விஸ்வாசம். இந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஹைதராபாத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தில் அஜித்தின் நாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். முதன்முறையாக அஜித்தின் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை படக்குழு தொடங்க இருக்கிறது. அடுத்து மும்பை மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கும் அஜித்துக்கு சாக்‌ஷி அகர்வால் மற்றொரு நாயகியாக நடிக்க இருப்பதாக தெரிகிறது.

அதிகம் படித்தவை:  சாமி போல் நம்பினேன் என்னை மோசம் செய்துவிட்டார்.! ஸ்ரீரெட்டி லீக்கில் மேலும் ஒரு பிரபல நடிகர்.!

ஹைதராபாத்தில் செட் அமைத்து ஷூட்டிங் நடத்திய விஸ்வாசம் படக்குழுவிற்கு ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவிலேயே பெரிய படப்பிடிப்பு தளம் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் கட்டப்பட்டு இருக்கிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்புத்தளம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அரங்கின் திறப்பு விழா குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஆர்.கே.செல்வமணி, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. பிரமாண்டமான அரங்குகள் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தினார்கள். இதன் மூலம், ஆயிரத்துக்கும் அதிகமான பெப்சி ஊழியர்களுக்கு வேலை கிடைத்தது. ஆனால், பெரிய நட்சத்திரங்கள் சிலர் படப்பிடிப்பை ஹைதராபாத் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் நடத்தி வருகின்றனர் என்று கூறியிருந்தார். மேலும், அஜித் படங்கள் பெரும்பாலும் வெளி மாநிலங்களில் ஷூட் செய்யப்படுவதால், தமிழகத்தில் உள்ள திரைத்துறை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்ற சர்ச்சையும் பரவலாக எழுந்தது.

அதிகம் படித்தவை:  குத்தாட்ட பாடல் ஷூட்டிங்: டான்சர் படும் பாட்டை பார்த்திருக்கிறீர்களா ?
ajith visuvasam
ajith visuvasam

இந்தநிலையில், விஸ்வாசம் படத்தின் இரண்டாவது ஷெட்யூலை சென்னையில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இதில், முழுக்க முழுக்க ஃபெப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்தவும் படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர். இதன்மூலம் அஜித் படம் குறித்த சர்ச்சைக்குத் தயாரிப்பு நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. விரைவில் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.