Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

34 வருடத்திற்கு பின் உருவாகும் சம்சாரம் அது மின்சாரம் 2-ம் பாகம்.. விசுவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலம் யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் 1986 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்ட சூப்பர் ஹிட் படம்தான் விசுவின் சம்சாரம் அது மின்சாரம்.

இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தயாரிக்க முடிவெடுத்த, நடிகர் விசு அதற்கான கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை அவரே உருவாக்க விரும்பினார்.

ஆனால் அவருக்கு உடல்நிலை குறைவால் சமீபத்தில் காலமானார். அதன்பின் இந்தப் படத்தை தயாரிக்க மக்கள் அரசன் பிக்சர்ஸ் ராஜா தயாரிக்க முன்வந்தார்.

மேலும் இந்தப் படத்தை விசுவின் உதவியாளர் வி.எல். பாஸ்கர் இயக்க உள்ளார். அதேபோல் இந்தப் படத்திற்கு பரத்வாஜ் இசை அமைக்கிறார்.

அதேபோல் இந்தப் படத்திற்காக விசுவின் மகள் லாவண்யா வசனம் எழுத உள்ளார். மேலும் சம்சாரம் ஒரு மின்சாரம் இரண்டாம் பாகத்தில் விசுவின் கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

visu-cinemapettai

visu-cinemapettai

மேலும் இந்தப் படத்திற்கான மற்ற நடிகைகள் நடிகர் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். எனவே கூடிய விரைவில் சம்சாரம் ஒரு மின்சாரம் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்க விருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Continue Reading
To Top