Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்தடுத்து அருமையான படங்களாக தன் வசம் வைத்துள்ள விஷ்ணு விஷால். பட்டயகிளப்புங்க ப்ரோ …
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு மூலம் நடிகராக விஷ்ணு விஷால் அறிமுகமானவர். அதன்பிறகு பல படங்களில் நடித்து கலக்கி வருகிறார். கிரிக்கெட்டர் ஆக வேண்டியது ஹீரோவாகிவிட்டார் நம் விஷ்ணு விஷால். குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன், போன்ற பல படங்கள் இவர்க்கு நல்ல பெயர் எடுத்து கொடுத்தது.
இவரின் அடுத்தடுத்த ப்ராஜெக்டுகள் அணைத்துமே நம் ஆர்வத்தை தூண்டும் படி தான் உள்ளது..
தமிழ் மற்றும் தெலுங்கில் ரெடியாகும் “காடன்” போஸ்ட் ப்ரொடக்ஷன் ஸ்டேஜில் உள்ளது. கவுதம் மேனனின் அசிஸ்டன்ட் இயக்கும் “FIR” பட பர்ஸ்ட் லுக் சமீபத்தில் தான் வெளியானது. இதுமட்டுமன்றி விஷ்ணு விஷால் தன் நண்பர் விக்ராந்துடன் நடிக்கும் படம் மற்றும் “இன்று நேற்று நாளை 2” உறுதியாகி உள்ளது.
இது மட்டுமன்றி “ஜெயில்” படம் எடுக்கும் வசந்தபாலனின் அடுத்த படம், சமீபத்தில் வெளியான “ஜீவி” படத்தை இயக்கிய கோபிநாத்தின் அடுத்த ப்ரொஜெக்ட் என பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம். அதோடு சமீபத்தில் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான “ஜெர்சி” தெலுங்கு படத்தின் தமிழ் ரிமேக்கிலும் இவர் தான் என கிசு கிசுகின்றனர்.
வாவ் சூப்பர் விஷ்ணு விஷால். சினிமாபேட்டையின் சார்பில் வாழ்த்துக்கள்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
