Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குண்டு வெடிப்பின் பின்னணியில் விஷ்ணு விஷால். வெளியானது புதிய பட டைட்டில், பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்.

இன்று விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது.

FIR  படத்தின் டைட்டில் எப்.ஐ.ஆர். டைட்டிலுக்கு கீழே பைசல், இப்ராஹிம், ரியாஸ் என மூன்று இஸ்லாமிய பெயர்களை குறிப்பிட்டு அதன் முதல் எழுத்து எப்.ஐ.ஆர் என்று பொருள் படும்படி உள்ளது. மேலும் முகத்தை மூடிய படி நம் ஹீரோ உள்ளார். மஞ்சிமா மோகன் ஹீரோயின்.

Vishnu Vishal in FIR

சுஜாதா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆனந்த் ஜாய் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் வாயிலாக கவுதம் மேனனின் 8 வருட அசிஸ்டன்ட் மனு ஆனந்த் இயக்குனர் ஆகிறார். அஷ்வத் இசை அமைக்கிறார், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் போஸ்டர் பின்னணியில் பல தீவிரவாத தாக்குதல்கள் பற்றிய செய்திகள் உள்ளது. விஷால் தீவிரவாதியாக நடிக்கிறாரா, அல்லது அவர்களை பிடிக்கும் காவல்துறை அதிகாரியா ? அல்லது undercover செல்லும் போலீசா என பல கேள்விகள் எழுந்துள்ளது இந்த மோஷன் போஸ்டர் பார்த்த பின்பு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top