விஷ்ணு விஷால் நடித்த ‘கதாநாயகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் நடிகர் தனுஷ்.

பொதுவாக நடிகர் தனுஷ் விஷால் அணியை சேர்ந்த இளம் நடிகர்களுடன் பெரியளவில் பழக்கம் வைத்து கொள்ள மாட்டார். இந்த நிலையில் விஷால் அணியின் முக்கிய நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடித்த படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிட நடிகர் தனுஷ் சம்மத்தித்துள்ளார்.
இதன்படி நேற்று மாலை நடிகர் தனுஷ் ‘‘விஷ்ணுவின் அடுத்தபடமான ‘கதாநாயகன்’ பர்ஸ்ட்லுக்கை தனது டுவிட்டரில் வெளியிட்டார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ போஸ்டர் தலைப்புபோல் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரும் அமைந்துள்ளது. அதேபோல் படத்தில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷ்ணுவிஷால், கேதரின் தெரசா, சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சீன்ரோல்டன் இசையமைத்து வருகிறார். முருகானந்தம் இயக்கும் இந்த படத்தை விஷ்ணுவே தயாரிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  இனி மிஸ் ஆகவே கூடாது! அடுத்தடுத்து படங்கள்! தனுஷின் மெகா பிளான்..