Tamil Cinema News | சினிமா செய்திகள்
கிரேக்க இளவரசன் போல கட்டுமஸ்தான உடலுடன் விஷ்ணு விஷால்.. வைரலாகுது 6 பேக் போட்டோ
கிரிக்கெட் வீரராக அஸ்வின், கோலி, ரோஹித்துடன் சுற்றி திரிய வேண்டிய நபர். ஆனால் நம் கோலிவுட்டில் வந்து நம்மை சினிமா வாயிலாக மகிழ்வித்து வருகிறார். ஹீரோவாக மனிதர் ஏகத்துக்கு பிஸி.
தமிழ் மற்றும் தெலுங்கில் “காடன்”. கவுதம் மேனனின் அசிஸ்டன்ட் இயக்கும் “FIR”. நண்பர் விக்ராந்துடன் நடிக்கும் படம் மற்றும் “இன்று நேற்று நாளை 2”. இத்துடன் சிலுக்குவாருப்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்லா அய்யாவு அவர்களுடன் மீண்டும் கூட்டணி வைக்கிறார், படத்தையும் தயாரிக்கிறார். சமீபத்தில் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான “ஜெர்சி” ரிமேக். இது மட்டுமன்றி “ஜெயில்” படம் எடுக்கும் வசந்தபாலனின் அடுத்த படம், சமீபத்தில் வெளியான “ஜீவி” படத்தை இயக்கிய கோபிநாத்தின் அடுத்த ப்ரொஜெக்ட் என பேச்சுவார்த்தையில் உள்ளது.
சினிமா வாழக்கை ஒருபுறம் இருக்க மறுபுறம் தன் பெர்சனல் வாழ்விலும் மனிதர் விவாகரத்துக்கு பின் அடுத்த ஸ்டேஜ் செல்வார் என எதிர்பார்க்கிறோம். ஜிவாலா கட்டா உடனான நட்பை தான் சொல்கிறோம்.
Thank you for pushing me to hit the gym 🤗 https://t.co/tLUAFgvv4Z
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) January 12, 2020
இது இவ்வாறு இருக்க இவரின் இந்த 6 பேக் போட்டோ இரண்டு நாட்களாக இணையத்தை கலக்கி வருகிறது.

Vishnu Vishal
