Connect with us

Cinemapettai

விஷ்ணு விஷாலையும் விட்டுவைக்காத பார்ட் 2 ஆசை.. அட போயும் போயும் இந்தப் படத்தையா? ஒர்க் அவுட் ஆகுமா?

vishnu-vishal-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஷ்ணு விஷாலையும் விட்டுவைக்காத பார்ட் 2 ஆசை.. அட போயும் போயும் இந்தப் படத்தையா? ஒர்க் அவுட் ஆகுமா?

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். படத்தில் கண்டிப்பாக ஏதாவது இருக்கும் என ரசிகர்கள் நம்பிச் சென்று பார்க்கக் கூடிய நடிகர்களில் இவரும் ஒருவர்.

அந்த வகையில் ராட்சசன், முண்டாசுப்பட்டி போன்ற படங்கள் இவர் கொடுத்த தோல்வி படங்களை எல்லாம் மறக்கடித்து விட்டது. விஷ்ணு விஷால் நடிப்பில் தொடர்ந்து எஃப் ஐ ஆர், மோகன்தாஸ், ஜெகஜால கில்லாடி என படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

இந்நிலையில் இவருக்கும் வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் ஆசை வந்துவிட்டது போல. ரவிக்குமார் இயக்கத்தில் இன்று நேற்று நாளை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆர்வமாக இருக்கிறாராம் விஷ்ணு விஷால்.

அதுமட்டுமல்லாமல் அந்த படத்தின் தயாரிப்பாளரும் சமீபத்தில் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் இரண்டாம் பாகம் படங்கள் எதுவுமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெறவில்லை என்பதை கவனிக்க வேண்டும். பார்ட் 2 என்றாலே ரசிகர்கள் கண்டிப்பாக மொக்கையாகத்தான் இருக்கும் என நம்பி தியேட்டர் பக்கமே செல்வதில்லை.

இன்று நேற்று நாளை படம் அறிவியல் சம்பந்தப்பட்ட கதையை கையில் எடுத்ததால் அதன் பார்ட் 2 இயக்கினால் கண்டிப்பாக விறுவிறுப்பாக இருக்கும் என ஆசைப்பட்டு இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இருந்தாலும் அடுத்தடுத்து எதிர்பார்ப்புள்ள படங்களில் நடித்து வரும் விஷ்ணு விஷால் பார்ட் 2 படங்களில் நடித்து சொதப்பினால் சினிமாவை விட்டே காணாமல் சென்று விடுவார் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top